என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரிலையன்ஸ் ஜியோ"
- குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.
- இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்கள் விலையை உயர்த்திய ஜியோ நிறுவனம் இடையில், புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் புதிய ISD ரீசார்ஜ் சலுகைகளின் விலை ரூ. 39 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ. 99 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐஎஸ்டி மினிட் பேக் என அழைக்கப்படும் புதிய சலுகைகள் பயனர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இன்றி குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.
குறுகிய காலக்கட்டத்திற்கு சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோருக்காக இந்த ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ. 39 விலையில் கிடைக்கும் சலுகையில் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதே போன்று வங்கதேசத்திற்கு ரூ. 49 விலையில், 20 நிமிடங்கள் வரை பேசலாம்.
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள 15 நிமிடங்களுக்கு ரூ. 49 செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பேச 15 நிமிடங்களுக்கு ரூ. 69 செலுத்த வேண்டும்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அழைப்பு மேற்கொள்ள 10 நிமிடங்களுக்கு 79 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் பூடானுக்கு 15 நிமிடங்கள் பேச ரூ. 89 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ. 99 ரீசார்ஜ் செய்யும் போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கு பத்து நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்கள் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.
- இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
- 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
- பங்குகளின் விலை 22 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.
- ஜியோ ஐபிஓ திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகலாம்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டெட் தனியாக பிரிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜியோ நிறுவனத்தின் மதிப்பீடு ரூ. 9.3 லட்சம் கோடிகள் வரை இருக்கும் என்று முன்னணி முதலீட்டு நிறுவனமான ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் பிட்டியலிடும் போது மதிப்பீட்டை 112 பில்லின் டாலர்கள் வரை நிர்ணயிக்கும் என்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையை விட 7 முதல் 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 3,580 வரை இருக்கும் வகையில் ரேட்டிங் இருந்ததாக ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய பங்குசந்தை நிறைவு நேரத்தில் இருந்த தொகையை விட 13 சதவீதம் வரை குறைவு ஆகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை 22 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. சிறு பங்குதாரர்களுக்கு ஒட்டுமொத்த ஐபிஓ-வும் விற்பனைக்கு கிடைக்கலாம் என்றும் ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஜியோ ஐபிஓ திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜியோ சலுகையில் தினமும் 2 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
- இந்த சலுகையில் ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ரிசார்ஜ் சலுகையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 909 விலையில் கிடைக்கும் புதிய ஜியோ சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. வரையிலான அதிவேக டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன.
அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். தவிர இந்த சலுகையில் சோனி லிவ் மற்றும் ஜீ5 என பல்வேறு ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. ஜியோ வலைதள விவரங்களின் படி ரூ. 909 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மொத்தத்தில் 168 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த சலுகையின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி அதிவேக டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் பயனர்கள் நொடிக்கு 40Kb வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோ கிளவுட் சேவைக்களுக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோருக்கு இலவச 5ஜி டேட்டா வசதியும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஐ.சி.சி. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 808 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட்டன.
- ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.
- ஜியோவின் முற்றிலும் புதிய ஃபீச்சர் போன் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது.
- ஜியோபோன் பிரைமா மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிராண்டு இந்திய சந்தையில் புதிய ஜியோபோன் பிரைமா 4ஜி மாடலை அறிமுகம் செய்தது. இது ஃபீச்சர் போன் என்ற நிலையிலும், இதில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் 23 மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜியோபோன் பிரைமா 4ஜி அம்சங்கள்:
2.4 இன்ச் டி.எஃப்.டி. 320x240 பிக்சல் டிஸ்ப்ளே
ARM கார்டெக்ஸ் A53 பிராசஸர்
512 எம்.பி. ரேம்
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
23 மொழிகளில் இயக்கும் வசதி
கை ஒ.எஸ்.
1200-க்கும் அதிக செயலிகளை பயன்படுத்தும் வசதி
எஃப்.எம். ரேடியோ
சிங்கில் சிம் ஸ்லாட்
3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
ப்ளூடூத் 5.0
1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
ஜியோபோன் பிரைமா 4ஜி மாடல் புளூ மற்றும் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜியோமார்ட் மூலம் நடைபெறுகிறது.
- ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது.
- ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஜியோ ஏர்ஃபைபர் சேவை 1Gbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி வருகிறது. இணைய வேகம் மட்டுமின்றி ஜியோஃபைபர் பலன்களும் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜியோஃபைபர் ரூ. 1199 விலை கொண்ட சலுகையில் தற்போது ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
புதிய மாற்றத்தின் படி ஜியோஃபைபர் ரூ. 1199 சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ், ஜியோசினிமா பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் மற்றும் 14 இதர ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது. ஜியோஃபைபர் ரூ. 999 சலுகையில் 150Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோசினிமா பிரீமியம் சந்தா வழங்கப்படவில்லை.
ஜியோஃபைபர் மேக்ஸ் சலுகையில் ஜியோசினிமா பிரீமியம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளின் விலை ரூ. 1499, ரூ. 2 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் முறையே 300Mbps, 500Mbps மற்றும் 1000Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.
முன்னதாக ஜியோ நிறுவனம் தனது ஏர்ஃபைபர் இணைய சேவைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை ரூ. 599 ஆகும்.
- ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
- ஜியோவின் 5ஜி மொபைல் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஜியோ போன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த மொபைல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
அந்த வரிசையில், இரண்டு புதிய மொபைல் போன்களின் விவரங்கள் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதுபற்றிய தகவல்களை டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது X (முன்பு டுவிட்டர்) அக்கவுன்டில் பகிர்ந்து இருக்கிறார். அதன்படி புதிய ஜியோ போன் மாடல்கள் நொய்டாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இரண்டு ஜியோ போன் மாடல்களும் JBV161W1 மற்றும் JBV162W1 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி போனாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz LCD பேனல், 4 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் 4ஜி ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது.
- ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
- டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 19 மற்றும் ரூ. 29 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவினை வழங்குகிறது. இவை முறையே 1.5 ஜிபி மற்றும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.
இரு சலுகைகளுக்கும் எவ்வித வேலிடிட்டியும் இல்லை. எனினும், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகை நிறைவடையும் போது, இதற்கான வேலிடிட்டி நிறைவுக்கு வந்துவிடும். இந்த ஆட்-ஆன் டேட்டா பேக் சலுகையில் கிடைக்கும் டேட்டா, ஏற்கனவே உள்ள சலுகையில் வழங்கப்படும் டேட்டா தீர்ந்தால் தான் பயன்படுத்தப்படும்.
ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவற்றை ரிசார்ஜ் செய்த வரிசையில் தான் பயன்படுத்த முடியும். முதலில் ரிசார்ஜ் செய்த வவுச்சர் தீர்ந்த பிறகு தான், அடுத்த வவுச்சரை பயன்படுத்தலாம். டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இரண்டு சலுகைகள் தவிர ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ரூ. 15, ரூ. 25, ரூ. 61, ரூ. 222 மற்றும் ரூ. 121 விலைகளில் ஆட்-ஆன் சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி, 50 ஜிபி மற்றும் 12 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகலும் ஜியோ வலைதளம் மற்றும் ஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
- ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- இந்த மொபைலில் ஜியோ சினிமா ஆப் கொண்டு நிகழ்ச்சிகள், திரைப்படங்களை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் போன் பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்தது. இந்த பிரான்டிங்கில் ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுக்க 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களை சென்றடைய ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஜியோ பாரத் போன் ஸ்மார்ட் ஃபீச்சர் போன் ஆகும். இதில் இண்டர்நெட் பயன்படுத்துவதோடு, யுபிஐ பேமன்ட் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு செயலிகளை பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஜியோ 4ஜி ஃபீச்சர் போனுடன் ஜியோ பாரத் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் புதிய ஜியோ பாரத் போனின் விலை ரூ. 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 4ஜி ஸ்மார்ட்போன் ஃபீச்சர் போன் மாடல் ரெட் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ரிடெயில் தவிர இதர பிரான்டுகளும் ஜியோ பாரத் பிளாட்ஃபார்மில் இணைந்து ஜியோ பாரத் போன்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. ஜியோ பாரத் போன்களின் முதல் பத்து லட்சம் யூனிட்களுக்கான பீட்டா டெஸ்டிங் ஜூலை 7-ம் தேதி துவங்க இருக்கிறது.
ரிசார்ஜ் சலுகை விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ பாரத் சலுகைகளின் விலை ரூ. 123 முதல் துவங்குகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ பாரத் வருடாந்திர சலுகையின் விலை ரூ. 1234 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையிலும் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
ஜியோ பாரத் போன் அம்சங்கள்:
ஜியோ பாரத் போனின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த போன் வழக்கமான ஃபீச்சர் போன்றே காட்சியளிக்கிறது. இதில் சிறிய ஸ்கிரீன், கீபோர்டு மற்றும் ஏராளமான ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைல் கொண்டு யுபிஐ பேமன்ட் செய்ய முடியும். இதற்கு ஜியோ பே செயலியை பயன்படுத்த வேண்டும். இத்துடன் ஜியோ சினிமா ஆப் கொண்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.
ஜியோ பாரத் போனுடன் ஜியோ சாவன் ஆப் சந்தா வழங்கப்படுகிறது. இதில் சுமார் எட்டு கோடிக்கும் அதிக பாடல்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர எப்எம் ரேடியோ, டார்ச்லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.
- ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.
ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.
ஜியோடேக் அம்சங்கள்:
ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.
ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.
ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.
ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.
விலை விவரங்கள்:
ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.
ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம்.
- ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இரண்டு புது சலுகைகளும் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 899 மற்றும் ரூ. 349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு புதிய ஜியோ சலுகைகளும் மைஜியோ செயலி, ஜியோ வலைதளம் மற்றும் இதர மூன்றாம் தரப்பு வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜியோ சலுகைகளில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349 சலுகை தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதுதவிர அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 899 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
இந்த சலுகையிலும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் சந்தா வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 349 சலுகை போன்றே ரூ. 899 சலுகையிலும் ஜியோ அறிமுக சலுகை பொருந்தும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்